» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)
பொங்கலுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 18ஆம்தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "பொங்கல் பண்டிகைக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06178) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 3 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 5:01:38 PM (IST)

அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, நலம், வளம் பெருகட்டும்: தமிழிசை பொங்கல் வாழ்த்து!
புதன் 14, ஜனவரி 2026 12:16:48 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் : நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு!
புதன் 14, ஜனவரி 2026 8:55:08 AM (IST)

ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:23:27 PM (IST)

