» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: அன்பில் மகேஷ் அறிவிப்பு

புதன் 14, ஜனவரி 2026 5:01:38 PM (IST)

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12500-ல் இருந்து ரூ.15000 ஆக உயர்த்தப்படு என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக எழும்பூர் காந்தி இர்வின் சாலைக்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்து தனித்தனி குழுக்களாக ஆசிரியர்கள் வந்தனர்.

அவர்களை அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த போலீசார் கைது செய்தனர். பல ஆசிரியர்கள் பஸ்சில் ஏற மறுத்து, சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி பஸ்சில் ஏற்றி மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறும்போது, ‘எங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்கு எத்தனை நாட்கள், மாதங்கள் ஆனாலும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம். மக்களாட்சியில் போராட, கருத்து தெரிவிக்க அனுமதி இல்லை. அரசு ஊழியர்களை அலைக்கழிப்பது ஜனநாயக படுகொலை. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லாமல் போராடுவோம்’ என்றனர். இதைப்போல பகுதி நேர ஆசிரியர்களும் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "பொங்கல் தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12500-ல் இருந்து ரூ.15000 ஆக உயர்த்தப்படும். மேலும், கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படாத மே மாத ஊதியம் ரூ.10,000 வழங்கப்படும். மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்” என தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory