» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, நலம், வளம் பெருகட்டும்: தமிழிசை பொங்கல் வாழ்த்து!
புதன் 14, ஜனவரி 2026 12:16:48 PM (IST)
பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: உலகத் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழர் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் விழா இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பையும் கலைகளையும் பெருமைப்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்களைை பாதுகாக்கும் வகையில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்த விஸ்வகர்மா நிதி உதவி திட்டம்.மண்பாண்டத் தொழிலாளர்களை நாமும் ஆதரித்து பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை,அடுப்பு வாங்கி பாரதப் பிரதமரின் விருப்பப்படி சுயசார்பான இந்தியாவை உருவாக்குவோம்.
பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
போகி நாளன்று தீய சக்திகளை கொளுத்துவோம்...
டயர்கள் கொளுத்துவதைத் தவிர்ப்போம்...
சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்...
தங்கட்டும் மகிழ்ச்சி...
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 5:01:38 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் : நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு!
புதன் 14, ஜனவரி 2026 8:55:08 AM (IST)

ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:23:27 PM (IST)

