» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஜன.15 முதல் வறண்ட வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:49:48 PM (IST)
தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஜன.13) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 முதல் 18-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி நிலவக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து, நாலுமுக்கில் தலா 7 செமீ, காக்காச்சி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலா 5 செமீ, கோடநாடு, கோத்தகிரி, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை குறித்த சர்ச்சை பேச்சு: சி.வி. சண்முகத்திற்கு எதிராகக் கிளம்பும் கண்டனக் குரல்கள்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:31:33 PM (IST)

வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி: ஆட்சியர் இரா. சுகுமார் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:52:43 PM (IST)

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் : ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு ரஜினிகாந்த் பதில்!
செவ்வாய் 17, மார்ச் 2026 12:03:29 PM (IST)

பிலாஸ்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்: கேரளாவின் சேர்த்தலாவில் கூடுதல் நிறுத்தம்
செவ்வாய் 17, மார்ச் 2026 10:24:55 AM (IST)

மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அரசு மருத்துவர் கைது
செவ்வாய் 17, மார்ச் 2026 10:20:28 AM (IST)

கார் தீப்பிடித்து எரிந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக அச்சம்!
செவ்வாய் 17, மார்ச் 2026 10:15:08 AM (IST)