» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு : சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தல்!

திங்கள் 12, ஜனவரி 2026 3:23:30 PM (IST)


கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சேரன்மகாதேவியில் நடைபெற்ற சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் சேரன்மகாதேவியில் பக்கீர் பாவா தர்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் அமர்வில் திக்ரு மஜ்லிஸ் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பட்டமன்றத்திற்கு அமைப்பின் மாவட்ட கௌரவத் தலைவர் அப்துர்ரஹீம் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி இமாம் பி. குலாம் முகைதீன் ஆலிம் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். இஸ்லாமிய மாத இதழ் ஆசிரியர் ஏ. பீர்முகம்மது ஆலிம் நடுவராக இருந்தார். 

இதையடுத்து நடைபெற்ற கருத்தரங்கிற்கு மேலப்பாளையம் மஜ்லிஸல் உலமா சபைத் தலைவர் முஹம்மது இலியாஸ் உஸ்மானி தலைமை வகித்தார். இதில், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், சென்னை பல்கலைக் கழக அரபித்துறை முன்னாள் உதவி பேராசிரியர் வி.எஸ். அன்வர் பாதுஷா, முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், மாவட்ட சிறுபான்மை நலக்குழுத் தலைவர் வீ. பழனி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் உள்ளிட்டோர் பேசினார்கள் மாலையில் உலமா உமரா கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சர்வ சமய நல்லிணக்க மாநாட்டுக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் வீரவநல்லூர் எஸ்.ஏ. ஷேக்மீரான் மிஸ்பாஹி தலைமை வகித்தார். அமைப்பின் மாநிலத் தலைவர் பி.ஏ. காஜா முயீனுத்தீன், பார்கவி மயிலாடுதுறை வள்ளலார் கோவில் கட்டளை தர்மபுரம் ஆதினம் ஸ்ரிமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மு. அப்துல்வஹாப், உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர்அலி ஆலிம், ஐஎன்டியூசி தேசிய செயலர் அ. அமீர்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட பொருளார் பி.ஆதம் இல்யாஸ் தூய இம்மானுவேல் ஆலய ஆயர் ஏ. கிப்ஸன் ஞானதாஸ், கடையநல்லூர் அஸ்லமியா அரபிக் கல்லூரி முதல்வர் ஷவ்கத் அலி, அமைப்பின் மாநில துணை பொதுச்செயலர் கா.மு. இல்யாஸ் ரியாஜி உள்ளிட்டோர் பேசினர். 

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அரசு வழங்கிவரும் 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டும், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக அனுபவம் உள்ள மார்க்க அறிஞர்களை நியமனம் செய்ய வேண்டும், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 17 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும், உலமாக்கள் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

நிகழ்ச்சியினை அமைப்பின் மாவட்டச் செயலர் ஜலீல் அஹ்மது உஸ்மானி தொகுத்து வழங்கினார். மாவட்ட பொருளாளர் முஹம்மது கஸ்ஸாலி ஹஜரத் வரவேற்றார். அமைப்பின் அம்பாசமுத்திரம் வட்டாரத் தலைவர் ஏ. மீரான்கனி  ஆலிம் நன்றி கூறினார். மாநாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory