» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

திங்கள் 12, ஜனவரி 2026 10:26:10 AM (IST)


மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று 2வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. குறிப்பாக நெல்லையில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது.

இதன் காரணமாக, மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் நேற்று தடை விதித்திருந்தனர். இந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாத நிலையில் இரண்டாவது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், காலையில், மணிமுத்தாரு அருவிக்கு குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory