» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி-மைசூர் இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:38:08 PM (IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதன்படி வண்டி எண்.06283 09-01-2026 (வெள்ளிக்கிழமை), 13-01-2026 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் மைசூரில் இருந்து மாலை 06:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
வண்டி எண். 06284 10-01-2026 (சனிக்கிழமை), 14-01-2026 (புதன்கிழமை) ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து மதியம் 02-00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07-45 மணிக்கு மைசூர் சென்றடையும்.
இந்த ரயில்கள் மாண்டியா, மாத்தூர், சென்னப்பட்டணா, ராமநகரம், கெங்கேரி பெங்களூர் பெங்களூர் கண்ட்ரோல்மென்ட் ஓசூர் தர்மபுரி சேலம் நாமக்கல் கரூர் திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் மா.பிரம்மநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைப்பு: விஜய் அறிவிப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 4:19:26 PM (IST)

தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
வெள்ளி 9, ஜனவரி 2026 4:08:09 PM (IST)

தமிழ்நாட்டிற்கு முக்கியமான தேர்தல்; திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது : அன்புமணி பேச்சு
வெள்ளி 9, ஜனவரி 2026 12:55:23 PM (IST)

திருநெல்வேலியில் ஜன.21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
வெள்ளி 9, ஜனவரி 2026 12:03:38 PM (IST)

பேட்டை சரக்கு வாகன முனையம், விற்பனை சந்தையில் ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:56:00 AM (IST)

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பஸ் நிலையம் கட்ட எதிர்ப்பு: ஜமாத்தார்கள் திரண்டதால் பரபரப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 11:40:35 AM (IST)

