» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தலைமை செயலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட முயற்சி : சென்னையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 12:26:41 PM (IST)
சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று தூய்மை பணியாளர்கள் பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை பாரிமுனை குறளகத்தில் இருந்து ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். குறளகத்திற்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்து தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
கோட்டை நோக்கி நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பாகவே தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் அவர்களை வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: சிவகாசி அருகே சோகம்!
சனி 27, டிசம்பர் 2025 12:00:34 PM (IST)

மார்கழியில் மக்களிசை: பறை இசைத்து கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்!
சனி 27, டிசம்பர் 2025 10:58:05 AM (IST)

இரட்டை பசுமாடு சின்னம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் : தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
சனி 27, டிசம்பர் 2025 10:14:28 AM (IST)

வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை: கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு
சனி 27, டிசம்பர் 2025 10:08:56 AM (IST)

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)



.gif)