» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிச.29ல் இ.எஸ்.ஐ.சி., வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம்!

சனி 27, டிசம்பர் 2025 8:44:30 AM (IST)

இ.எஸ்.ஐ.சி., வருங்கால வைப்புநிதி தொடர்பாக தூத்துக்குடி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (டிச.29) நடக்கிறது.

இ.எஸ்.ஐ.சி. சார்பில் ‘சுவிதா சமகம்’ மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் ‘‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற பெயரில் கூட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

அதன்படி நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் சர்.சி.வி.ராமன் நகரில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியிலும், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அவ்வை பண்ணை சந்து பகுதியில் உள்ள எக்செல் சென்ட்ரல் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

இதில் இ.எஸ்.ஐ.சி. காப்பீட்டாளர்கள் மற்றும் பயனாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் உள்பட அனைவரும் கலந்துகொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை நெல்லை இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலக இணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory