» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் : தவெக கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் பேச்சு!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:46:54 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று த.வெ.க. சார்பில் நடந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது அலி பேசினார்.
த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய், "வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள். உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும்.
மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். த.வெ.க. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளது. ஒளி ஒன்று பிறக்கும் அந்த ஒளி நமக்கு வழிகாட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். நம்பிக்கையுடன் காத்திருங்கள், நல்லதே நடக்கும்" என்று தெரிவித்தார்.
விழாவில் பேசிய ஆற்காடு நவாப் முகமது அலி, "தமிழ்நாடு அமைதியான மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாகவும் இருந்து வருகிறது" என்று தெரிவித்தார். தவெக பிரச்சார கூட்டங்களில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விஜய் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் : கனிமொழி எம்.பி
திங்கள் 22, டிசம்பர் 2025 5:04:28 PM (IST)

திமுக ஆட்சியை அகற்ற ஒற்றை கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம்: இபிஎஸ்
திங்கள் 22, டிசம்பர் 2025 12:26:58 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

காடுவெட்டி மெயின் ரோட்டில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்: காவல் துறை தீவிர விசாரணை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:06:43 AM (IST)

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல மகத்தான திட்டங்கள் வரப்போகிறது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திங்கள் 22, டிசம்பர் 2025 8:28:25 AM (IST)


.gif)