» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் ரூ.39.20 கோடியில் ஹஜ் இல்லம் : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:32:29 AM (IST)



சென்னையில் 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில், ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 16) அடிக்கல் நாட்டினார்.

இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை அவா்களின் வாழ்நாள் கடமைகளில் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படுகிறது.

ரூ.39.20 கோடியில் 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப கட்டப்படும் தமிழ்நாடு ஹஜ் இல்ல கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory