» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி தெப்பகுளம் அருகே திடீர் பள்ளம் : கான்கிரீட் தளம் சேதம் - அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:17:45 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் தெப்பகுளம் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் சேதம் அடைந்த பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் சுமார் 130 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளத்தில் ஆண்டுதோறும் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெப்பக்குளத்தை சுற்றி ரூ.75 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், முதற்கட்டமாக தெப்பக்குளத்தைசுற்றி கான்கிரீட் கல் பதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தெப்பக்குளம் சுவர் அருகே திடீரென 6 அடிஅளவிற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் தளங்கள சேதமானது. மேலும் அருகில் இருந்த மின்மாற்றிகள் சரியும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் தெப்பக்குளத்தைஆய்வு செய்து உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், அறங்காவலர்கள் கந்தசாமி, மகாராஜன், திமுக நிர்வாகி மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:34:58 PM (IST)

திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல... சர்வே தூண் தான்! - தமிழக அரசு வாதம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:26:29 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

பெண்குரலில் பேசி வாலிபரிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்தவர் கைது!
வெள்ளி 12, டிசம்பர் 2025 3:28:52 PM (IST)

தூத்துக்குடியில் ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:25:21 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:44:35 AM (IST)


.gif)