» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வாளர் கணிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 11:51:16 AM (IST)
தமிழக கடலோர மாவட்டங்களில் டிச.9 முதல் 14-ம் தேதி வரை கனமழை வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகம் கடந்து அரபிக்கடல் சென்ற தாழ்வுப் பகுதியும், காற்று சுழற்சியும் ஒன்றிணைந்து லட்சத்தீவுக்கு தெற்குப் பகுதியில் நீடிக்கிறது. புதிதாக குமரிக்கடல் நோக்கி நகர்ந்த காற்று சுழற்சி காரணமாக தற்போது டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழிந்துவருகிறது.
அரபிக்கடல் தாழ்வு சுழற்சி கிழக்கு காற்றை ஈர்ப்பதன் காரணமாக வால்பாறை முதல் கன்னியாகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களின் மேற்குப் பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவு உண்டு. இதேநிலை வரும் 8-ம் தேதி வரை தொடரும்.
மலேசியா, தாய்லாந்து கடந்து வங்கக் கடலில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் தாழ்வு நிலை வரும் 9 முதல் 14-ம் தேதி வரை இலங்கை, குமரிக்கடல், தென் தமிழகம் வழியாக அரபிக்கடல் நோக்கி நகர்ந்து, செங்கல்பட்டு முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை வரை கொடுக்கும். ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)

சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் பாதிப்பு!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:14:58 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் : கூடுதல் கோட்ட மேலாளர் தகவல்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:56:21 AM (IST)

செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் - பொதுமக்கள் கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 8:59:06 PM (IST)

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
சனி 6, டிசம்பர் 2025 4:48:55 PM (IST)


.gif)