» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி அனல்நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தம்: 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 8:25:15 AM (IST)

தூத்துக்குடி அனல் நிலையத்தில் ஒரே நேரத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 15-ஆம் தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, முதலாவது, இரண்டாவது அலகுகள் முற்றிலும் எரிந்து சேதமானது.
4, 5-ஆவது யூனிட்டுகள் பராமரிப்பு பணிகளுக்காக சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. 3-ஆவது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 3வது யூனிட் பழுது காரணமாக நேற்று இரவு நிறுத்தப்பட்டது. இதனால் அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்களும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேலாளர்!
வியாழன் 11, டிசம்பர் 2025 11:55:29 AM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

தூத்துக்குடி தெப்பகுளம் அருகே திடீர் பள்ளம் : கான்கிரீட் தளம் சேதம் - அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:17:45 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

புதுவையில் ரேஷன் கடைகள் இல்லையா? விஜய் கருத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
புதன் 10, டிசம்பர் 2025 5:27:49 PM (IST)


.gif)