» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் பணியில் தேர்தல் பிரிவு ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு

வெள்ளி 5, டிசம்பர் 2025 8:02:38 AM (IST)

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் எஸ்ஐர் ஆர் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தூத்துக்குடி பி&டி காலனியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் சரவணன் (35). மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சண்முகபிரியா (30) என்ற மனைவியும், ரிசானா (8), சஹானா(5), ரிஷிலிங்கா (3) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த சரவணனுக்கு, நேற்று காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதிக பணிச் சுமையின் காரணமாகவே சரவணன் உயிரிழந்துள்ளதாகவும், அவருடைய குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory