» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் அவசரகதியில் எஸ்ஐஆர் திட்டம்: விஜய்தரம்சிங் குற்றச்சாட்டு
வியாழன் 27, நவம்பர் 2025 10:15:06 AM (IST)

தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் எஸ்ஐஆர் திட்டத்தில் அவசரகதியில் செய்வது மிகவும் தவறானது என்று காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளரும் கர்நாடக சட்டபேரவை முன்னாள் மேலவை உறுப்பினருமான விஜய்தரம்சிங் தெரிவித்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் வலிமையை உயர்த்தவும், காங்கிரஸ் கொள்கையை ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் முன்னேற்றுவதற்காக நடவடிக்கையின் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான கருத்து கேட்பு கூட்டம் நாசரேத்தில் நேற்று நடைபெற்றது.
சங்கத்தன் ஸ்ரிஜன் அபியான் திட்டம் என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளரும் கர்நாடக சட்ட பேரவை முன்னாள் மேலவை உறுப்பினருமான விஜய்தரம்சிங் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார, நகர, கிராம கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து தனித்தனியே கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் எஸ்.ஐ.ஆர் ஐ நடத்த முயற்சிக்கிறார்கள். எஸ்.ஐ.ஆர்-ஐ தமிழகத்தில் செயல்படுத்துவதன் நோக்கம் தவறானது. இன்னும் தேர்தல் நடக்க நான்கு மாதங்களில் இருக்கும் நிலையில் இவ்வளவு அவசரமாக செய்வதன் நோக்கம் என்ன? பீகாரில் தேர்தல் நடப்பதற்கு முன்பாக விரைவாக நடத்தியதன் நோக்கத்தை நாம் தெரிந்து இருக்கிறோம்.
எதிர்க்கட்சிகளின் வாக்குகளை நீக்கிவிட்டு பீகாரில் ஆளுங்கட்சிக்கு சாதகமான நபர்களை சேர்ப்பது என்ற செயலை போலவே தமிழகத்திலும் தற்போது தேர்தல் நடைபெறும். பிற மாநிலங்களிலும் நடத்துகிறார்கள் அவர்கள் வேண்டுமென்றால் தற்பொழுது கர்நாடகாவில் எஸ்ஐஆர்-ஐ நடத்தி இருக்கலாம். இன்னும் அங்கு தேர்தல் நடக்க இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் அவர்கள் இவ்வாறு செய்வது மிகவும் தவறானதுஎன்றார்.
பேட்டியின்போது ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, கட்சியின் தேர்தல் பார்வையாளர்களான சுமதி அன்பரசன், முன்னாள் எம்எல்ஏ ரவிச்சந்திரன் உள்ளிட்டார் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி: உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வியாழன் 27, நவம்பர் 2025 12:27:22 PM (IST)

செங்கோட்டையனை தவெகவிற்கு வரவேற்கிறேன்; வெற்றி நிச்சயம் : விஜய் பேச்சு!
வியாழன் 27, நவம்பர் 2025 11:45:14 AM (IST)

முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
வியாழன் 27, நவம்பர் 2025 11:28:07 AM (IST)

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை!!
வியாழன் 27, நவம்பர் 2025 10:47:52 AM (IST)

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!
வியாழன் 27, நவம்பர் 2025 10:37:40 AM (IST)

நீதித்துறையில் 50 ஆண்டு சேவை: முன்னாள் நீதிபதி ஜோதிமணிக்கு சென்னை பார் கவுன்சில் பாராட்டு!
வியாழன் 27, நவம்பர் 2025 7:55:54 AM (IST)


.gif)