» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்!
ஞாயிறு 23, நவம்பர் 2025 6:05:45 PM (IST)
மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதாவது, 4 மாவட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை வந்துள்ளதால் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
சனி 22, நவம்பர் 2025 9:30:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.85 லட்சம் மோசடி வழக்கு: மேலும் 2பேர் கைது!
சனி 22, நவம்பர் 2025 8:19:58 PM (IST)

த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்: 2000 பேருக்கு மட்டும் அனுமதி!
சனி 22, நவம்பர் 2025 5:33:44 PM (IST)

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 22, நவம்பர் 2025 4:22:46 PM (IST)

தமிழக அரசின் விருது பெற்ற வீரவநல்லூர் பாய் நெசவாளர் பெண்களுக்கு பாராட்டு விழா
சனி 22, நவம்பர் 2025 3:36:59 PM (IST)

கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
சனி 22, நவம்பர் 2025 3:25:44 PM (IST)


.gif)