» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ரூ.85 லட்சம் மோசடி வழக்கு: மேலும் 2பேர் கைது!

சனி 22, நவம்பர் 2025 8:19:58 PM (IST)

தூத்துக்குடியில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என லிங்க் அனுப்பி ரூ.85 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என facebook விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பின்னர் ஒரு வாட்ஸ்அப் குழுவில் அவரை இணைத்து அதில் ஒரு டிரேடிங் செயலி (Trading App) லிங்க் அனுப்பி அந்த ஆப் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி மேற்படி இளைஞரை நம்பவைத்து ரூபாய் 85 லட்சம் மோசடி செய்த வழக்கில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு ஏற்கனவே ஒரு எதிரியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மேற்படி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய எதிரிகளான மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சயாஜி ரொகோகலே மகன் சந்திப் சயாஜி ரொகோகலே (33) மற்றும் டட்டு முஞ்சல் மகன் சோபன் டட்டு முஞ்சல் (37) ஆகிய இரண்டு எதிரிகளை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கடந்த 19.11.2025 அன்று மகாராஷ்டிரா மாநிலம் சென்று கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (22.11.2025) சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் மூலம் வருமானம் போன்ற இணையதளங்களில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் உள்ள லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். மேலும் சைபர் குற்ற புகார்களுக்கு உடனடியாக புகார் எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory