» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநில ஹேக்கத்தான் இன்னோவேஷன் போட்டி: தூத்துக்குடி ஸ்பிக்நகர் பள்ளி மாணவர்கள் சாதனை!

திங்கள் 17, நவம்பர் 2025 5:49:10 PM (IST)



சென்னையில் நடைபெற்ற மாநில ஹேக்கத்தான் இன்னோவேஷன் போட்டியில் தூத்துக்குடி ஸ்பிக்நகர் உயர்நிலை பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர. 

சென்னையில் உள்ள சாய் ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான இன்னோவாTN 25 ஹேக்கத்தான் போட்டியில், ஸ்பிக்நகர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவர் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.

ஷெல் நெஸ்ப்ளோரர் திட்டத்தின் கீழ் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டஷன் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஜெரூஸ் G. பால், கைலேஷ்குமாரன் V.மற்றும் ஜ்யோரிட்டின் தங்களின் ஸ்மார்ட் ஹைட்ரோபானிக் விவசாயத் திட்டத்திற்காக மூன்றாம் பரிசை வென்று, பணப்பரிசையும் பெற்றுள்ளனர்.

அறிவியல் ஆர்வத்தையும் சமூக நல எண்ணத்தையும் அடிப்படையாகக் கொண்ட இவர்களின் திட்டம், தூத்துக்குடி போன்ற கடினமான வானிலை பகுதிகளிலும், அந்த ஊருக்கு உரிய பயிர்களை வளரும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட, விவசாய முறையை வடிவமைக்கிறது. வருடம் முழுவதும் பயிர்கள் வளர்க்க உதவும் இந்த ஸ்மார்ட் ஹைட்ரோபானிக் விவசாயத் திட்டமானது எளிமை, நிலைத்தன்மை, மற்றும் உலகளாவிய விவசாயிகளின் பிரச்சைகளை தீர்ப்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டஷன் மூலம் பள்ளிகளில் நடத்தப்படும் ஷெல் நெஸ்ப்ளோரர் திட்டம், இந்த திட்டம் மாணவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் தொடர்புடைய உலகளாவிய சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக சவால்களைச் சமாளிக்க பயிற்றுவிக்கிறது நீர், உணவு, சக்தி தொடர்பான புதுமையான திட்டங்களை உருவாக்கி அதற்கான தீர்வுகளை மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஸ்மார்ட் ஹைட்ரோபானிக் விவசாயத் திட்டமானது குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய பயிர்களை தூத்துக்குடி போன்ற சவாலான காலநிலையை கொண்ட பகுதிகளிலும் வளர்க்க ஏற்ற சூழ்நிலைகளை முறைப்படுத்தி, உருவாக்கி பயிர்கள் வளர்வதை சாத்தியமாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வகையில், வெற்றி பெற்று பள்ளிக்கு திரும்பிய மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர் மு.பாபு ராதாகிருஷ்ணன், ATL ஆசிரியர் ஜிதா மால், மற்றும் ஷெல் நெஸ்ப்ளோரர் வழிகாட்டிகள் மாணவர்களின் குழுவாக செயல்படும் திறன், படைப்பாற்றல், புதிய படைப்புக்கான ஆர்வம் ஆகியவற்றை பாராட்டி வாழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory