» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராகுல் அரசியலை விட்டு விலக மற்றுமொரு வாய்ப்பு: பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து குஷ்பு கருத்து!
வெள்ளி 14, நவம்பர் 2025 4:07:32 PM (IST)
காங்கிரஸ் படுதோல்வி எதிரொலியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக மற்றுமொரு வாய்ப்பு வந்துவிட்டது என தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு கூறியுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(நவ. 14) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு(122) அதிகமான தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது.இந்நிலையில் பிகார் தேர்தல் முடிவுகள் குறித்துப் பதிவிட்டுள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு, பிரதமர் மோடி மற்றும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இணைந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "வெற்றி பெற என்ன தேவை என்பதை அவர்கள் காட்டிவிட்டார்கள். காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது. ராகுல் காந்தி அரசியலைவிட்டு விலக மற்றுமொரு வாய்ப்பும் காரணமும் இது" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றுமொரு பதிவில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுவிட்டது. சில தலைவர்கள்(மோடி, நிதீஷ்) வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர். மக்களுக்கு ஆற்றிய சேவை அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சனி 15, நவம்பர் 2025 11:25:40 AM (IST)

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சனி 15, நவம்பர் 2025 11:14:53 AM (IST)

பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சனி 15, நவம்பர் 2025 10:15:50 AM (IST)

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 8:22:34 PM (IST)


.gif)