» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சனி 15, நவம்பர் 2025 11:25:40 AM (IST)

சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . 

சென்னை கலைவாணர் அரங்கில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், "நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் அதற்கு அடிப்படை தூய்மை தான். எந்த பேரிடரை எதிர்கொண்டாலும் அதில் இருந்து இந்த மாநிலம் மீண்டுவருவதில் உங்கள் பணி தான் இருக்கிறது. உங்களின் ஒப்பற்ற உழைப்பால் தான் சுற்றுபுரம் சுத்தமாக இருக்கிறது.

நான் சென்னை மாநகருக்கு மேயராக இருந்த போது களைஞர் இது பதவி அல்ல பொறுப்பு என்று சொன்னார். அதேபோல் நான் உங்களுக்கு சொல்றேன் நீங்கள் செய்வது வேலை ஆல்ல சேவை. ஊரே அடங்கிய பிறகு ஓய்வின்றி உழைப்பவர்கள் தூய்மை பணியாளர்கள் தான். இந்த மாநகரமே உங்களின் சேவையை பார்த்து நன்று உணர்வுடன் வணங்குகிறது. ஒட்டுமொத்த சென்னை சார்பாக உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் திமுக அரசு படிப்படியாக செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory