» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 14, நவம்பர் 2025 11:40:29 AM (IST)
ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நித்தியானந்த தியான பீடத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனிநபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி உள்ள சீடர்களை வெளியேற்ற வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.இதன் அடிப்படையில் ராஜபாளையம் போலீசார், ஆசிரமரத்தில் உள்ள சீடர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே யாரையும் வெளியேற்றக்கூடாது. மேலும் முறையாக விசாரிக்காமல் வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே உயர்நீதிமன்றம், நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் இல்லை. எனவே நித்யானந்தா தொடர்பான வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பி இருந்தது. பின்னர் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி விக்டோரியா கவுரி நேற்று பிறப்பித்தார். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தாவின் சீடர்களை வெளியேற்றுவது தொடர்பான மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சனி 15, நவம்பர் 2025 11:25:40 AM (IST)

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சனி 15, நவம்பர் 2025 11:14:53 AM (IST)

பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சனி 15, நவம்பர் 2025 10:15:50 AM (IST)

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 8:22:34 PM (IST)


.gif)