» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வியாழன் 13, நவம்பர் 2025 5:31:06 PM (IST)
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும், அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இவ்வரசு கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த விலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1,829 கோடி செலவாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில ஹேக்கத்தான் இன்னோவேஷன் போட்டி: தூத்துக்குடி ஸ்பிக்நகர் பள்ளி மாணவர்கள் சாதனை!
திங்கள் 17, நவம்பர் 2025 5:49:10 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளால் சுமார் ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர் - சீமான் குற்றச்சாட்டு!
திங்கள் 17, நவம்பர் 2025 5:41:09 PM (IST)

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா அச்சுறுத்தல்: தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
திங்கள் 17, நவம்பர் 2025 5:02:52 PM (IST)

தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடு ஆந்திராவுக்குச் சென்றது கவலை அளிக்கிறது : பிரேமலதா பேட்டி
திங்கள் 17, நவம்பர் 2025 4:56:58 PM (IST)

சவுதி அரேபியாவில் சாலை விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திங்கள் 17, நவம்பர் 2025 3:58:31 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை எப்போது துவங்கும்? வெதர்மேன் தகவல்!
திங்கள் 17, நவம்பர் 2025 3:44:28 PM (IST)


.gif)