» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி : தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து பணி தீவிரம்!
செவ்வாய் 11, நவம்பர் 2025 7:49:34 PM (IST)

டில்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி கடல் பகுதியில் தமிழக கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் நேற்று மாலை காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக சுமார் 14 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்புபை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு உச்ச கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்த சம்பவம் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள், அனல் மின் நிலையம், குலசேகரபட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம், ஆகியவற்றில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கடலோர கால் பாதுகாப்பு படை குழுமம் சார்பில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேகம் படும்படி ஏதும் படகுகள் கடலில் ஊடுருவல் இருக்கிறதா? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர். 3 படகுகள் மூலம் வேம்பார் முதல் பெரியதாழை வரை 5 கடல் மைல் தொலைவிற்கு உட்பட கடல் பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசியல் கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் அனுமதி : தலைமை தேர்தல் ஆணையருக்கு விஜய் கடிதம்!
சனி 15, நவம்பர் 2025 3:53:47 PM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சனி 15, நவம்பர் 2025 11:25:40 AM (IST)

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சனி 15, நவம்பர் 2025 11:14:53 AM (IST)

பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சனி 15, நவம்பர் 2025 10:15:50 AM (IST)


.gif)