» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் தி.மு.க. நிர்வாகிகள் முறைகேடு: அன்புமணி குற்றச்சாட்டு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 4:55:47 PM (IST)
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தி.மு.க. நிர்வாகிகள் முறைகேடுகளை செய்து வருவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் அரசு ஊழியர்களுக்கு பதிலாக தி.மு.க.வினரே கணக்கீட்டுப் படிவங்களைக் கொடுத்து திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெறக்கூடும் என்று முகாரி ராகம் பாடிக் கொண்டு, இன்னொருபுறம் இத்தகைய முறைகேடுகளில் தி.மு.க.வினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டின் பல ஊர்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பதிலாக தி.மு.க.வின் ஐ.டி. பிரிவு, இளைஞரணி ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளே வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கீட்டு விவரங்களை நிரப்பி வாங்குகின்றனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்கு மட்டுமே படிவங்களைக் கொடுக்கும் இவர்கள், மற்றவர்களின் வீடுகளுக்கு இதுவரை படிவங்களைத் தரவில்லை.
கடைசி நேரம் வரை அவர்களுக்கு படிவங்களைத் தராமல் குழப்பம் ஏற்படுத்தி, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தான் தி.மு.க.வின் மறைமுகச் செயல் திட்டமாகும். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதை எதிர்ப்பதாகவும், இது தி.மு.க. ஆதரவு வாக்காளர்களை நீக்குவதற்கான சதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாரி ராகம் பாடி வருகிறார். இன்னொரு பக்கம் தி.மு.க.வினரை களத்தில் இறக்கிவிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக முறைகேடுகளை அரங்கேற்றச் செய்து வருகிறார்.
ஒருபுறம் ஒப்பாரி வைத்துக் கொண்டு இன்னொரு புறம் மோசடிகளை அரங்கேற்றுவதுதான் காலம் காலமாக தி.மு.க.வினரின் முழுநேரத் தொழில். அந்த வழக்கத்திற்கு இந்தத் தேர்தலும் தப்பவில்லை. இன்னும் கேட்டால் களத்தில் தாங்கள் செய்யும் முறைகேடுகள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது போல தி.மு.க. தொடர் நாடகங்களை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் இதே சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அவை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு வெளிமாநில ஐ.எ.எஸ்.அதிகாரியை பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் சட்ட விரோதமான முறையில் ஈடுபடுத்தப்பட்ட தி.மு.க.வினர் மீது சட்டப்படியாக குற்றவியல் நடவடிக்கைகளும், அதற்கு இடம் கொடுத்தவாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளும் உடனே மேற்கொள்ளப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசியல் கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் அனுமதி : தலைமை தேர்தல் ஆணையருக்கு விஜய் கடிதம்!
சனி 15, நவம்பர் 2025 3:53:47 PM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சனி 15, நவம்பர் 2025 11:25:40 AM (IST)

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சனி 15, நவம்பர் 2025 11:14:53 AM (IST)

பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சனி 15, நவம்பர் 2025 10:15:50 AM (IST)


.gif)