» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தின விழா : ரத்த தானமுகாம்!
செவ்வாய் 11, நவம்பர் 2025 10:22:23 AM (IST)

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தின விழாவை முன்னிட்டு ரத்த தானமுகாம் நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தின விழா வங்கியின் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்டமான கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விஇ ரோட்டில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவமனை உடன் இணைந்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பாக ரத்ததான முகாம் நடந்தது. ரத்ததான முகாமில் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியமான சலீ எஸ்.நாயர் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வங்கியின் துணைத் தலைவர் பி.ஆர்.அசோக் குமார், தலைமை நிர்வாக மேலாளர் வின்சென்ட், தலைமை கணக்கியல் அதிகாரி சஞ்சய்குமார் கோயல், பொது மேலாளர்கள் ரமேஷ், டேவிட் ஜோஸ், ஜெயராமன் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர் சாந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் வங்கி ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசியல் கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் அனுமதி : தலைமை தேர்தல் ஆணையருக்கு விஜய் கடிதம்!
சனி 15, நவம்பர் 2025 3:53:47 PM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சனி 15, நவம்பர் 2025 11:25:40 AM (IST)

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சனி 15, நவம்பர் 2025 11:14:53 AM (IST)

பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சனி 15, நவம்பர் 2025 10:15:50 AM (IST)


.gif)