» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்

திங்கள் 3, நவம்பர் 2025 8:38:53 AM (IST)



ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் கள்ளபிரான் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 5 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் திருவிழா நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 10 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது. 

மாலை 6 மணிக்கு சாயரட்சை, மாலை 6.30 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து சாத்துமுறை நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory