» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப்-4 பணிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்பு : 7-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அவகாசம்!

வியாழன் 30, அக்டோபர் 2025 8:26:24 AM (IST)

குரூப்-4 பணிகளுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் விவரங்கள் கடந்த 22-ஆம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கணினிவழிதிரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் விவரங்கள் (வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர்- பழங்குடி இளைஞர்கள் ஆகிய பதவிகள் தவிர) www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) பிரிவு வாயிலாக நவம்பர் 7-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் அடுத்தநிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory