» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழர்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர் சீமான் : வைகோ புகழாரம்

வியாழன் 30, அக்டோபர் 2025 4:49:51 PM (IST)



தமிழர்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர் சீமான். இனி ஒற்றுமையாக பயணிப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

பசும்பொன்னில் நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திக்கவிருந்தபோது, அவ்விடத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். அப்போது அவரை சீமான் வரவேற்றார். இருவரும் ஆரத்தழுவி அன்பை பரிமாரிக்கொண்டனர். 

இதையடுத்து சீமானை புகழ்ந்து வைகோ செய்தியாளர்களிடையே பேசியதாவது; இளையோர் உள்ளங்களில் புயல் வீசி வரும் செந்தமிழன் சீமானை பசும்பொன்னில் சந்தித்தது மகிழ்ச்சி. லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர் சீமான். நான் மருத்துவமனையில் இருந்தபோது சீமான் வந்து பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கவலையோடு நான் விசாரிப்பேன். என் அம்மா இறந்தபோது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார். இனி எங்கள் பயணம் தொடரும். ஒற்றுமையாக பயணிப்போம். சீமானின் முயற்சிகளும் வெற்றி பெறட்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory