» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)
நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- குமரி மாவட்டம் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்துக்கும், குளச்சல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை மெஞ்ஞானபுரத்துக்கும், தக்கலை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் ராபர்ட் வீரகேரளம்புதூருக்கும், கடையநல்லூர் ஆடிவேல் ஆலங்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர குமரி மாவட்டத்தில் பணிபுரியும் அந்தோணியம்மாள், ஜெயலட்சுமி, உமா ஆகிய 3 பெண் இன்ஸ்பெக்டர்களும் அந்த மாவட்டத்துக்குள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் குமரி மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேசமணி நகர் ஜெசி மேனகா, சுசீந்திரம் பெனடிக்ட், புதுக்கடை மகேந்திரன் ஆகியோர் நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகை நிறைவு விழா : ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:54:53 PM (IST)

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 9:02:17 AM (IST)

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)

தூத்துக்குடியில் உலக நன்மைக்காக சிறப்பு துவா : திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
சனி 25, அக்டோபர் 2025 4:56:22 PM (IST)


.gif)