» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)
பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லையில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06166), மறுநாள் காலை 10.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் சிறப்பு ரயில் (06165) மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு நெல்லை வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் ரத்து..!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், "பயணிகள் முன்பதிவு மிக குறைவாக இருப்பதால் வருகிற 24 மற்றும் 26-ந் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதே தேதியில் நெல்லையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில், 28-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில், 29-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து கோட்டயம் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில், நாளை (வியாழக்கிழமை) கோட்டயத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு சென்னை சென்டிரல் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
புதன் 22, அக்டோபர் 2025 3:53:56 PM (IST)

மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்!
புதன் 22, அக்டோபர் 2025 12:16:00 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 11:42:59 AM (IST)

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 11:23:25 AM (IST)

காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் : வானிலை மையம் தகவல்!
புதன் 22, அக்டோபர் 2025 10:41:10 AM (IST)

ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தில் திடீர் பள்ளம்: இணைப்புச்சாலையும் ½ அடி கீழே இறங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 9:00:04 AM (IST)
