» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் : வானிலை மையம் தகவல்!
புதன் 22, அக்டோபர் 2025 10:41:10 AM (IST)
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையக் கடக்கும், புயலாக மாறும் வாய்ப்பு குறைந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது.
இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரம் அடையும் என்று வானில மையம் தெரிவித்துள்ளது . தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுவை இடையே கரையைக் கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு குறைந்துள்ளது. தெற்கு ஆந்திராவிலும் பாதிப்பு அதிகம் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
- தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
- சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
புதன் 22, அக்டோபர் 2025 3:53:56 PM (IST)

மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்!
புதன் 22, அக்டோபர் 2025 12:16:00 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 11:42:59 AM (IST)

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 11:23:25 AM (IST)

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தில் திடீர் பள்ளம்: இணைப்புச்சாலையும் ½ அடி கீழே இறங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 9:00:04 AM (IST)
