» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மோசடி ஆவணப் பதிவுகளை தடுக்க நடவடிக்கை: பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை
புதன் 15, அக்டோபர் 2025 10:38:37 AM (IST)
ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி ஆவணப் பதிவுகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில தகவல் தொடர்பு செயலாளர் சிவசங்கரராமன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், "மோசடி ஆவணப் பதிவுகள் மற்றும் ஆள் மாறாட்டங்கள் மூலம் பொதுமக்கள் தங்களது சொத்துக்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். அனைவராலும் நீதிமன்றங்களுக்கு சென்று தங்களது சொத்துக்களை மீட்டெடுப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம் ஆகும். மேலும், நீதிமன்றங்கள் மூலம் ஆணை பெற நீண்ட காலதாமதமும் ஆகின்றது.
பெரும்பாலான மோசடி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டங்கள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுவது போல மோசடியாக உற்பத்தி செய்யப்ட்ட போலி இறப்புச் சான்றுகள், வாரிசு சான்றுகள் மூலமாகவே செய்யப்படுகின்றன. பதிவு ஆதார் அடையாள அட்டைகளையும் போலியாக தயாரித்து ஆள்மாறாட்டங்கள் செய்து வருகின்றனர். வருவாய்த் துறை மூலம் இறப்புச் சான்று மற்றும் வாரிசு சான்று போன்றவைகளை பெற விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் ஆதார் அடையாள அட்டையும் சேர்த்தே பெறப்படுகின்றன..
அவைகளில் இறந்தவர் புகைப்படம் மற்றும் வாரிசுகளின் புகைப்படங்கள் நிச்சயம் இருக்கும். எனவே தற்போது டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் இறப்புச் சான்று மற்றும் வாரிசு சான்றுகளில் அவைகள் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர் மற்றும் அஞ்சல் தலை அச்சுப் பிரதி புகைப்படங்களையும் இணைத்து டிஜிட்டல் முறையில் சான்றுகளாக வழங்கினால் இறந்தவர் யார்? அவரது வாரிசுகள் யார்? என்ற முழு விபரங்களையும் பொது மக்கள் எளிதாக சரி பார்த்துக் கொள்ளலாம்.
பெரும்பாலான கிராமப்புரங்களில் தாத்தா பெயர், மகன் பெயர், பேரன் பெயர்கள் பொதுவாக ஒரே பெயரில் தான் உள்ளது. எனவே, இறப்புச் சான்று, வாரிசு சான்று, பட்டாக்கள் போன்றவைகள் உண்மையில் யாருடையவை என்று சரி பார்ப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுவதுடன் இவைகளே அனைத்;து முறைகேடுகளும் நடைபெற மூல காரணமாகின்றது.
இதுபோல வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து வகை பட்டாக்களிலும் நில உரிமையாளர்களின் அஞ்சல் தலை அளவுள்ள (Stamp size) புகைப்படங்களை அச்சுப் பிரதியாக இணைத்து வழங்கினால் உண்மையான நில உரிமையாளர்கள் யார் என்பதினை அனைவரும் எளிதில் அடையாளம் காணமுடியும்.
நாடு முழுவதுமுள்ள கோடிக்கணக்கான வாக்காளர்களின் அடையாளங்களை சரி பார்த்துக் கொள்ள வாக்காளர் பட்டியலில் இந்த அஞ்சல் தலை அளவுள்ள வாக்காளர்களது புகைப்படங்கள் அச்சுப் பிரதி வடிவில் வழங்கப்பட்டு அது தற்போது பயன்பாட்டில் உள்ளது.
எனவே இதே நடைமுறையில் வழங்குவதும் சாத்தியமான ஒன்று தான். வருவாய்த்துறை சான்றுகளை மேலும் பதிவுத்துறை மூலம் நடைபெற்று வரும் ஆவணப் பதிவுகள் அனைத்தும் ஆதார் வழி ஆளறி அடையாள அட்டை சரி பார்த்தல் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவைகளையும் மோசடிப் பேர்வழிகள் போலியாக தயாரித்து விடுகின்றனர்.
மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள். ஆகியோரின் கைவிரல் ரேகை சரி பார்ப்பு மற்றும் கருவிழி சரி பார்ப்பு போன்றவைகள் மூலம் ஆவணதாரர்களின் அடையாள விபரத்தை உறுதி செய்வது சில நேரங்களில் மிகவும் சிக்கலாகின்றது.
எனவே ஆவணப் பதிவுகளை மேற்கொள்ளும் போது தற்போதைய ஆளறி அடையாள அட்டை சரி பார்ப்பு முறையில் முகம் சரி பார்ப்பு வசதியையும் (FACIAL RECOGNITION) கூடுதலாக சேர்த்து நடைமுறைப்படுத்தினால் இதன் மூலம் ஆள் மாறாட்டப் பதிவுகளை பெருமளவில் தடுக்கலாம்.
எனவே தமிழக முதல்வர் பொது நலன் கருதி மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து வருவாய்த் துறை மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் பட்டா, இறப்புச் சான்று, வாரிசு சான்று போன்றவைகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் அஞ்சல் அளவு (Stamp size) புகைப்படங்களை அச்சுப் பிரதி வடிவில் வாக்காளர் பட்டியலில் இருப்பது போன்று இணைத்து டிஜிட்டல் வடிவில் வழங்கிடவும்.
பத்திரப் பதிவுத் துறையின் மூலம் Star 2.0 வழியில் ஆவணப் பதிவு செய்யும் நடைமுறை காலத்திலிருந்து பின் வழங்கப்பட்டு வரும் வில்லங்கச் சான்றுகளில் ஆவணதாரர்களின் அஞ்சல் அளவு (Stamp size) அச்சுப் பிரதி புகைப்படத்தையும் இணைத்து வழங்கிட ஆவன செய்யுமாறும்,
பத்திரப் பதிவுத்துறையில் ஆதார் வழி ஆளறி அடையாள அட்டை மற்றும் கருவிழி சரி பார்ப்பு போன்றவைகளுடன் கூடுதல் வசதியாக முகம் சரி பார்ப்பு வசதியையும் (FACIAL RECOGNITION) சேர்த்து வழங்கிடவும் ஆவன செய்யுமாறு தங்களை மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமைச்சர்கள் பேச்சை நீக்க கோரி அ.தி.மு.க. வெளிநடப்பு
புதன் 15, அக்டோபர் 2025 4:10:54 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 12:38:23 PM (IST)

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு
புதன் 15, அக்டோபர் 2025 12:26:15 PM (IST)

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய்தான் முக்கிய காரணம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
புதன் 15, அக்டோபர் 2025 12:05:32 PM (IST)
