» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாலுமாவடியில் ரூ.30 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை: மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்

புதன் 15, அக்டோபர் 2025 10:10:54 AM (IST)



நாலுமாவடியில் ரூ.30 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி ஊராட்சி எஸ்.எஸ்.பி. தெரு, சலவைக்காரர் தெரு மற்றும் வடக்கு தெரு ஆகிய இடங்களில் உள்ள சாலை பல வருடங்களாக குண்டும், குழியுமாகவும், பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்பட்டது. மழை காலத்தில் தண்ணீர் தேங்கியதன் காரணமாக கிராம மக்கள் வெளியே தெருக்களில் செல்ல முடியாத நிலையில் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இச் சாலையை சீரமைக்கக் கோரி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸிடம் இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று நமக்கு நாமே திட்டம் மற்றும் இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கம் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இப்பணிக்கு இயேசுவிடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் பங்களிப்பாக வழங்கப்பட்டது.

இதன் துவக்க விழாவிற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை வகித்து ஜெபித்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை கிராம மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி யூனியன் முன்னாள் சேர்மனும், தி.மு.க. தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான ஜனகர், ஆழ்வார்திருநகரி வட் டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, அன்ட்றோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ், கச்சனாவிளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிங்ஸ்டன், உதவி பொறியாளர் வெள்ளப்பாண்டி, ஊராட்சி செயலர்கள் நாலுமாவடி வெள்ளத்துரை. கச்சனாவிளை பர்னபாஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார், இயேசுவிடுவிக்கிறார் சமூக பணிகளின் ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், இயேசு விடுவிக்கிறார் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory