» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்

புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் வினோத்குமார் (30). கூலி தொழிலாளி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், மதுசுதன் (5), மகேஷ் (2 மாதம்) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தென்காசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதன்பிறகு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த வினோத்குமார் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வினோத்குமாரை தென்காசி அனைத்து மகளிர் போலீசார் மீண்டும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக வினோத்குமாரை போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது அங்கு வந்த தந்தை மாடசாமியிடம் வினோத்குமார் பேசினார். அப்போது அவர், ‘‘தொலைபேசியில் பேசுவதற்கு பணம் இல்லை, ஆயிரம் ரூபாயை அனுப்பி வையுங்கள்’’ என கூறியுள்ளார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வினோத்குமாரை மீண்டும் சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் வினோத்குமார் நேற்று திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அவரை சிறை காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வினோத்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து, வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டு ஏன்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory