» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)
திருநெல்வேலியில் விற்பனைக்காக 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.கே.புரம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த டானா பகுதியைச் சேர்ந்த அன்வர்அலி (45), ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த அசன்மைதீன் (56) ஆகிய 2 பேரையும் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் 1 கிலோ 50 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர், அவர்கள் 2 பேரையும் வி.கே.புரம் காவல் நிலையம் அழைத்து சென்றார். இதுகுறித்து வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அன்வர்அலி, அசன்மைதீன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர்களிடமிருந்த 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமதாஸ் காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை : ஜி.கே.மணி வேதனை
செவ்வாய் 14, அக்டோபர் 2025 12:50:01 PM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது: கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:04:25 AM (IST)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16-ம்தேதி தொடங்கும் : வானிலை ஆய்வாளர்கள் தகவல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:01:38 AM (IST)

பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கான அரசாணை வெளியீடு: மதிப்பெண் சான்றிதழ் நடைமுறை மாற்றம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:41:21 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:29:22 AM (IST)
