» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல்!

செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:29:22 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல் ஏற்பட்டது. விமானம் பத்திரமாக தரை இறங்கியதால் 67 பேர் உயிர் தப்பினர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தூத்துக்குடியில் இருந்து 67 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்றது. நேற்று மதியம் 3.35 மணிக்கு சென்னையில் தரை இறங்கியபோது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருந்ததை கண்டு விமானி அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் பத்திரமாக தரை இறங்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து விமானம், சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் தரை இறங்கியதும் விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலை பழுது பார்க்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டு கண்ணாடியை மாற்றும் பணி நடந்து வருகிறது. 

விமானம் பத்திரமாக தரை இறங்கியதால் 67 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதேபோல் மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானத்திலும் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய ஆணையக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

கம்ப்யூட்டர் பொறியாளர்Oct 14, 2025 - 01:18:19 PM | Posted IP 162.1*****

ஒவ்வொரு விமானத்தை EXPIRY DATE போடுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory