» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை நடைபெறும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:45:08 PM (IST)
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களால் தேர்வுக்கு தயாராக முடியவில்லை என்றும் தேர்வு தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று காலை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, தற்போது தேர்வை தள்ளிவைத்தால் அது விண்ணப்பதாரர்களுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்து. அரசு தரப்பு வாதத்தை ஏற்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)
