» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு!
வியாழன் 9, அக்டோபர் 2025 10:53:00 AM (IST)

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-ம் ஆண்டு செப்.24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வணிக நகரான கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று கனிமொழி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர், மத்திய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அதேபோல் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்து பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இன்று முதல் (பரீட்சார்த்த முறையில்) நின்று செல்லும் என்று ரயில்வே வாரியம் அறிவித்தது. காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, கோவில்பட்டிக்கு 6.38 மணிக்கு வந்து, அங்கிருந்து 6.40 மணிக்கு புறப்படும். காலை 7.18 மணிக்கு விருதுநகர் சென்று, அங்கிருந்து 7.20 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்த சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன், மதிமுக மாநில துணை செயலாளர் நாராயணன், பாஜக வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ராஜா, ஆகியோர்கள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட சுமார் 150 நபர்கள் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் திருநெல்வேலி இருப்புப் பாதை காவல் வட்ட ஆய்வாளர் பிரியமோகன் தலைமையில் காவல் ஆளிநர்களும், கோவில்பட்டி கிழக்கு காவல் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை விருதுநகர் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளி சிறப்பு ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்தது: ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:29:48 PM (IST)

ராமதாஸ் காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை : ஜி.கே.மணி வேதனை
செவ்வாய் 14, அக்டோபர் 2025 12:50:01 PM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது: கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:04:25 AM (IST)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16-ம்தேதி தொடங்கும் : வானிலை ஆய்வாளர்கள் தகவல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:01:38 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)
