» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

புதன் 17, செப்டம்பர் 2025 11:34:36 AM (IST)



டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை டெல்லி சென்றார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. இரவு 8 மணிக்கு நேரம் வழங்கப்பட்டது. 

அதன்படி இரவு 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை, தனபால், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கிருஷ்ணமேனன் ரோட்டில் உள்ள அமித்ஷா இல்லத்துக்கு சென்றனர். இவர்கள் 3 தனித்தனி கார்களில் சென்றனர்.

அங்கு அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், மற்றவர்களும் அமித்ஷா இல்ல வளாகத்துக்குள் சிறிதுநேரம் நின்று பேசிவிட்டு அங்கிருந்து கலைந்தனர். முதலில் எம்.பி.க்களும், முன்னாள் அமைச்சர்களும் வெளியே வந்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி, இரவு 9 மணி அளவில் வெளியே வந்தார். அவர் உள்ளே செல்லும்போது ஒரு காரிலும், வெளியே வரும்போது இன்னொரு காரிலும் வந்தார். வெளியே அவருக்காக காத்திருந்த செய்தியாளர்களை அவர் சந்திக்கவில்லை. கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டே சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை சந்தித்தது ஏன்: என்பது குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவியில் கூறியதாவது:-மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான #பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory