» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாற மாற்றும் ராகவா லாரன்ஸ்: இலவச கல்வி வழங்க திட்டம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:46:50 AM (IST)
தான் கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி, கல்வியை இலவசமாக வழங்க முடிவு செய்திருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார்.
பல ஆண்டுகளாக, நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை மூலம் பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், காஞ்சனா 4’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. எப்போது படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினால், அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல காரியத்திற்கு எடுத்து வைத்துக் கொள்வேன். குரூப் டான்ஸராக இருக்கும் போது வாங்கிய சம்பளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மிச்சப்படுத்தி அதனை அம்மாவிடம் கொடுத்து அப்படி வந்த பணத்தில் வாங்கிய நிலத்தில் கட்டிய வீடு தான் இந்த வீடு.
முதல் முறையாக நான் கட்டிய வீடு. இந்த வீட்டை பசங்களுக்கு கொடுத்துவிட்டு நாம் வாடகை வீட்டிற்கு சென்றுவிடலாமா என்று அம்மாவிடம் கேட்டு அப்படி நாங்கள் கொடுத்த இந்த வீட்டை இப்போது நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தப் போகிறோம். 20 வருடங்களுக்கு முன்பு கொடுத்த இந்த வீட்டை வந்து பார்க்கும் போது ஒரு விதமான உணர்வு தோன்றுகிறது. எத்தனை பசங்க, இங்கு படித்தார்கள், சாப்பிட்டார்கள், இலவசமாக நாம் என்னென்னவோ கொடுக்கிறோம்
அதோடு கல்வியை இலவசமாக கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் நான் கட்டிய இந்த வீட்டை கொஞ்சம் மாற்றம் செய்து இலவச கல்வி கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்காக இந்த வீட்டில் நான் வளர்த்த பெண் இப்போது டீச்சராகிறார். இப்போ அவர்கள் தான் நான் கட்டப் போகும் பள்ளியின் முதல் டீச்சர்” என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு : அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:08:34 PM (IST)

குலசை தசரா பக்தர்களுக்கு திமுக பிரமுகர் இடையூறு - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 3:12:08 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது: விஜயை விமர்சித்த சீமான்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:07:44 PM (IST)

மரக்கடையில் விஜய் பிரசாரத்தால் ரூ.1¼ லட்சம் சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:00:41 PM (IST)
