» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு : அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்!

திங்கள் 15, செப்டம்பர் 2025 4:08:34 PM (IST)

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..

கோவை காளப்பட்டியில் கடந்த ஜூலை மாதம் 11 ஏக்கர் நிலம் வாங்கியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் கோ.தேவராஜன் என்பவர் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் நிதி மோசடியிலும் அண்ணாமலை ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர், "தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தமை மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டது குறித்து விசாரணை செய்ய வேண்டும். குண்டர் சட்டத்தின்கீழ் அவர்களை கைது செய்ய வேண்டும். சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அண்ணாமலை மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து நடத்திட வேண்டும்” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory