» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

திருநெல்வேலியில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக தன்னார்வலர் நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.விநாயகம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாக இயங்கும் ஆட்டோக்களை கட்டுப்படுத்துதல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேலும் அனைத்து பேருந்துகளின் கால அட்டவணை வழித்தட வரைபடம் மற்றும் கட்டண விபரம் பயணிகளுக்கு தெரியும் வகையில் தெளிவாக காட்சிப்படுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளில் 18 வயதிற்கு குறைவான மாணாக்கர்கள் வாகனங்களில் வருவதை பள்ளி நிர்வாகம் கண்டித்து அவ்வாறு நடைபெறாமல் முற்றும் தடுக்க வேண்டுமென அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு தெரிவிக்க கோரப்பட்டது. 

ஜங்ஷன் முதல் புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் பேருந்துகளை இரவு நேரங்களில் பேட்டை வரை நீடித்து தருமாறும், பேட்டையை ஆரம்ப நிலையாகக் கொண்டு புதிய பேருந்து நிலையம் வரை புதிய வழித்தட வசதிகள் ஏற்படுத்தி தருமாறும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு தெரிவிக்க கோரப்பட்டது. அதிக ஓசை எழுப்பும் இருசக்கர வாகனங்கள் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பொது செயலாளர் ஜாபர் அலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க பொது செயலாளர் கோ.கணபதி சுப்ரமணியன் மற்றும் மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் பொருளாளர் ஆர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory