» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா : ரஜினிக்கு அழைப்பு

வியாழன் 11, செப்டம்பர் 2025 5:17:07 PM (IST)



சென்னையில் வருகிற 13ம் தேதி நடைபெறும் இளையராஜா பாராட்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று 13.9.2025 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள "சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா”-விற்கான அழைப்பிதழை வழங்கினார். 

அப்போது முதல்-அமைச்சரின் செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory