» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்திப்பு

புதன் 10, செப்டம்பர் 2025 10:20:14 AM (IST)



முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தனது பிறந்த நாளை முன்னிட்டு  அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான  எடப்பாடி பழனிசாமியை சேலம் எடப்பாடி நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தும் ஆசியும் பெற்றார். 

அப்போது மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் காசிராஜன், ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ் நாராயணன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் திருச்செந்தூர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், பழக்கடை திருப்பதி, கந்தன், ஆனந்த், நீலம் நாராயணன், உள்ளிட்ட பலரும் இருந்தனர்.


மக்கள் கருத்து

TIRUCHENDUR MURUGANSep 10, 2025 - 02:50:55 PM | Posted IP 162.1*****

அதிமுக + பாஜக ஆட்சி அமைந்தவுடன்,S.P.சண்முகநாதன் இந்து அறநிலையத்துறை அமைச்சர்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory