» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாலை குருசுவாமி கோயிலில் ஆவணி வருஷாபிஷேக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:58:45 PM (IST)

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை பாலாசேத்திரம்- ஸ்ரீ வாலை குரு சுவாமி கோயிலில் ஆவணி வருஷாபிஷேக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இத்திருவிழா செப்டம்பர் 5ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு திங்கட்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, ரக்க்ஷா பந்தனம், முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது. திருவிழா முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை பரிவார மூர்த்திகள் மற்றும் விமானங்களுக்கு அபிஷேகம், சமகால கும்பாபிஷேகம், தொடர்ந்து சுவாமி உற்சவ விநாயகர், ஸ்ரீ பாலாம்பிகை அம்பாள், சுவாமி ஸ்ரீ சந்திரசேகரர், மனோன்மணி அம்மாள் சமயத்திரராக எழுந்தருள கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி அம்பாள் பிரகார உலா வந்து மணி மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாக காட்சி தந்தனர். தொடர்ந்து கும்பாபிஷேகம், சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. மாலை சாய ரட்சை பூஜை, அலங்கார தீபாரதனை, இரவு சுவாமி உற்சவ விநாயகர் சின்ன சப்பரத்திலும், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் ரத வீதி உலா வந்து காட்சி தந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், உச்சிக்கால பூஜை, சாய ரட்சை பூஜை, சமய சொற்பொழிவு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வருதல், திருவாசகம் முற்றோடுதல், திருவிளக்கு வழிபாடு, அலங்கார தீபாராதனை பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.
நிறைவு நாளான செப்டம்பர் 5ஆம் தேதி உச்சிக்கால பூஜை பகல் 1.30 முதல் 2 மணிக்குள் நித்தியானந்த மன்டத்தில் அன்னதான பூஜை, மகேஸ்வர பூஜை, மாலை சாயரட்சை பூஜை, பிரதோஷ வழிபாடு, தீபாராதனை நடக்கிறது. விழாவில் மூன்றாம் நாளான வியாழக்கிழமை28ம்தேதி காலை 10 மணி முதல் ஆன்மீக சொற்பொழிவாளர் ராஜபாளையம் கவிதா ஜவகர், தலைமையில் ஆன்மீக அமுதம் என்ற தலைப்பில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறு கிறது. விழா ஏற்பாடுகளை பக்த குழுவினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூருக்கு மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக டாக்டர் அறவாழி நியமனம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:36:59 PM (IST)

மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)

சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 6:59:32 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

செப்.4ம் தேதி தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:48:33 PM (IST)

ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு: எஸ்.பி.வேலுமணி மீண்டும் வழக்கில் சேர்ப்பு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:09:45 PM (IST)
