» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வினியோகம்: தமிழக அரசு உத்தரவு
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:13:45 PM (IST)
சுபமுகூர்த்த தினமான 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் (டோக்கன்) ஒதுக்கீடு செய்ய வேண்டுமென பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தது. இதையேற்று, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 முன்பதிவு டோக்கன்கள், 2 சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள், அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூருக்கு மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக டாக்டர் அறவாழி நியமனம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:36:59 PM (IST)

மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)

சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 6:59:32 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

செப்.4ம் தேதி தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:48:33 PM (IST)

ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு: எஸ்.பி.வேலுமணி மீண்டும் வழக்கில் சேர்ப்பு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:09:45 PM (IST)
