» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண் நோயாளியிடம் 5 பவுன் நகையை பறித்து விழுங்கிய மருத்துவமனை ஊழியர் கைது!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:29:41 PM (IST)
நெல்லையில் தனியார் மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் 5 பவுன் நகையை ஊழியர் பறித்து வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மாள் (79). இவரது கணவர் இறந்துவிட்டதால், மகன் சங்கர சுப்பிரமணியனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சுப்பம்மாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சுப்பம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க சங்கிலியை மருத்துவமனை ஊழியரான நெல்லை குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராமர் (25) என்பவர் பறித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பம்மாள் கூச்சலிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமர் அங்குள்ள கழிவறைக்குள் ஓடிச் சென்றார். எனினும் அங்கிருந்த ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து விசாரித்தனர். அப்போது, ராமர் நகையை வாயில் போட்டு விழுங்கி விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராமருக்கு ‘இனிமா' மருந்து கொடுத்து 5 பவுன் நகையை வெளியே எடுத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி ராமரை கைது செய்தனர். பெண் நோயாளியிடம் மருத்துவமனை ஊழியர் நகையை பறித்து வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூருக்கு மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக டாக்டர் அறவாழி நியமனம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:36:59 PM (IST)

மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)

சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 6:59:32 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

செப்.4ம் தேதி தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:48:33 PM (IST)

ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு: எஸ்.பி.வேலுமணி மீண்டும் வழக்கில் சேர்ப்பு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:09:45 PM (IST)
