» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காப்புரிமை விவகாரம்: நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 14, ஜூலை 2025 4:38:44 PM (IST)
காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், "நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குநர் ராபர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மிசஸ் அண்ட் மிஸ்டர்’. இந்தப் படத்தில் எனது இசையில் வெளிவந்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம் பெற்ற. ‘சிவராத்திரி’ பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காப்புரிமை மீறிய செயலாகும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு செந்தில்குமார் ராமமூர்த்தியிடம் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், மிசஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதோடு, அந்தப் படத்தின் விளம்பரங்களில் தனது பெயரும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது வனிதா விஜயகுமார் தரப்பில், சம்பந்தப்பட்ட பாடலை, எக்கோ நிறுவனத்தின் அனுமதியைப் பெற்று பயன்படுத்தியதாகவும், மனுதாரருக்கும் எக்கோ நிறுவனத்துக்கும் இடையேயான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜா தொடர்ந்த வழக்கில் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 17, ஜூன் 2026 8:50:57 PM (IST)

முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து 16 வழக்குகள் தாக்கல்!
புதன் 17, ஜூன் 2026 8:32:19 PM (IST)

மக்களை ஏமாற்றவே தவெக அரசு வெள்ளை அறிக்கை நாடகம்: கீதா ஜீவன் குற்றச்சாட்டு
புதன் 17, ஜூன் 2026 8:07:26 PM (IST)

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் : மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதன் 17, ஜூன் 2026 7:32:01 AM (IST)

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.4.51 கோடி ஓய்வூதிய நிதி மோசடி: அதிகாரிகள் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு!
புதன் 17, ஜூன் 2026 7:22:55 AM (IST)

தமிழ்நாட்டின் கடன் 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்வு: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 9:32:03 PM (IST)


