» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இபிஎஸ் ஒப்புக் கொண்டால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன் : ஓபிஎஸ் அறிவிப்பு!
திங்கள் 14, ஜூலை 2025 4:24:50 PM (IST)
அதிமுகவின் அனைத்து தொண்டர்கள் இணைவதற்கு இபிஎஸ் ஒப்புக் கொண்டால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் நான் இணைவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தனர். இதனிடையே, அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசியதாவது: அதிமுக தொண்டர்கள் இணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுகவின் அனைத்து தொண்டர்கள் இணைவதற்கு இபிஎஸ் ஒப்புக் கொண்டால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் நான் இணைவேன்.
எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. என்னுடன் இருப்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. மதுரையில் வருகின்ற செப்டம்பர் 4 ஆம் தேதி எனது தலைமையில் மாநாடு நடைபெறும். அது வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மாநாடாக இருக்கும். மாநாட்டுக்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
விஜய்யின் அரசியல் நகர்வுகள் இன்றுவரை நன்றாக இருக்கிறது. வருங்காலங்களில் அவரது அரசியல் முடிவுகள் ஜனநாயக ரீதியில் இருக்கிறதா என்பதை பார்த்து அவருக்கு எங்களின் தார்மீக ஆதரவு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம் : லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:37:31 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்கத் தடை: விநியோகம் அதிரடி முடக்கம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:55:49 PM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:48:20 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.650 கோடியில் ஏவுகலன் மையம்: முதல்வர் விஜய் தலைமையில் ரூ.67,452 கோடி ஒப்பந்தம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:40:56 AM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)



MGR FANSJul 15, 2025 - 08:07:03 AM | Posted IP 172.7*****